மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மாவட்டம் ஹூக்ளி நகரில் ரயில் நிலையத்தில் நான்கு வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பாட்டியுடன் இரவு நேரத்தில் உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது ரயில் நிலையத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்த சிறுமியை கடத்திச் சென்று பிறகு பாலியல் வன்கொடுமை செய்து அதே ரயில் நிலையத்தில் அருகே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு விரைந்து வந்த அந்த பகுதியினர் நிர்வாண கோலத்தில் இருந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் வன்கொடுமை செய்த நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
