ஒரு கப் தயிர் போதும்… முகம், முடிக்கு இப்படி யூஸ் பண்ணி பாருங்க…. அட்டகாசமான ரிசல்ட் கிடைக்கும்…!!

By Devi Ramu on கார்த்திகை 9, 2025

Spread the love

சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் முகம் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைக்கும் தயிரை பயன்படுத்தலாம். ஒரு கப் தயிரில் ஒரு சிட்டிகை மஞ்சள், சிறிதளவு கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு குளிர்ந்த நேரில் கழுவலாம். அடுத்ததாக தயிரில் அரிசி மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி செய்தால் ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் தினமும் முகத்தில் தயிரை உபயோகப்படுத்தலாம். தயிர் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவி செய்யும். தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு போடுவதற்கு முன்பு தயிர் தடவ வேண்டும். அப்படி தடவினால் புரதம் கிடைக்கும். வறண்ட முடி உள்ளவர்களுக்கு தயிர் மிகவும் நல்லது. தலை முடியை மென்மையாக மாற்றும்.