கள்ளக்குறிச்சி மாவட்டம் குடியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(33). கடந்த 2021 பிப்ரவரி 17-ஆம் ரங்கநாதன் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதற்கு உடந்தையாக அதே கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் (48) செயல்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் ரங்கநாதன் மற்றும் பாண்டுரங்கன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், ரங்கநாதனுக்கு ஆயுள் சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாண்டுரங்கனுக்கு ஆயுள் சிறை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிஉத்தரவிட்டார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.
