கோவை சரவணம்பட்டி அடுத்த சிவ தங்கம் நகர் பகுதியில் சேர்ந்த ஜிச்சு விஷ்ணு என்ற நபர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஐந்தாவது விதி பகுதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த வீட்டின் முன்பாக இரண்டு குட்டி நாய்கள் படுத்து கிடந்தன. அதனைக் கண்ட அவர் திடீரென்று அங்கிருந்த செங்கல்லை எடுத்து குட்டி நாய்களை தாக்கியுள்ளார். அதில் நாய் குட்டிகள் படுகாயம் அடைந்து உயிரிழந்த நிலையில் அவற்றைக் கடந்து விஷ்ணு சென்றுள்ளார்.
பிறகு இன்று காலை நாய்க்குட்டிகள் இரண்டும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நடந்து செல்லும் விஷ்ணு திடீரென்று நாய்க்குட்டிகளை கற்களை கொண்டு பலமாக தாக்குவதும் அந்த தாக்குதலில் நாய்க்குட்டிகள் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சங்க நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளித்த நிலையில் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நாய் குட்டிகளை கொள்ளும் கொடூரனின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
