தேர்தல் வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றம் வந்திருந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கழகம் ஒன்று பட வேண்டும், எம்ஜிஆர் எதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்தாரோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்ற நம்பிக்கை கொண்டவர் செங்கோட்டையன். அதிமுக ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். இந்த இயக்கம் தொண்டர்களுக்காகத்தான் எம்ஜிஆர் உருவாக்கினார். அதன்படி இந்த இயக்கத்தில் உள்ள இரண்டு கோடி தொண்டர்களும் தற்போது கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள்.
செங்கோட்டையன் எடுத்துக் கொண்டிருக்கின்ற முயற்சி வெற்றி பெறும். பிரதமரும் உள்துறை அமைச்சரும் அதிமுக ஒன்று பட வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பினால் இயக்கம் சென்று கொண்டிருக்கிற காரணத்தால் கூட்டணியில் இருந்து வெளியே வந்தாலும் பாஜக தலைவர் பேசிக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் ஒருங்கிணைப்பை விரும்புகின்றனர். பொதுச் செயலாளர் என்பவரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி யாராலும் மாற்ற முடியாது. அந்த அடிப்படை விதியையே மாற்று இருக்கிறார் ஈபிஎஸ். மேலும் அதிமுகவில் சேர எந்த பதவியையும் நாங்கள் கேட்கவில்லை என்றும் ஓபிஎஸ் சூசகமாக பேசியுள்ளார்.
