வருகின்ற 2026 தேர்தலில் SIR தான் ஹீரோவாக இருக்கப்போகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று செய்து வருகின்றனர். இப்பணியை அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அதிமுக சார்பிலும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்பட்ட இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சீர்திருத்த பணி தேவையில்லை என்ற கருத்தை ஒரு பக்கம் வைத்திருந்தாலும் திமுகவினரும் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை தகுதி உள்ளவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். இந்த SIR தான் 226 தேர்தலில் ஹீரோவாக இருக்கும். போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதால்தான் அதிமுக இதனை ஆதரிக்கிறது. தமிழகத்தில் போலி வாக்காளர்கள் தொகுதிக்கு பத்து முதல் 12000 பேர் வரை சேர்க்கப்படுகின்றனர். இதனால் திமுக பயந்து நடுங்குகிறது. SIR சிறப்பாக நடைபெற்ற தகுதியானவர்கள் வாக்களிக்கும் போதும் கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்ற இபிஎஸ் முதல்வராக வருவார் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
