வேறு பெண்ணோடு 18 வருடம் தொடர்பில் இருந்தேன்.. என் மனைவிக்கும் தெரியும்… உண்மையை உடைத்த பிரபல மலையாள நடிகர்..!!

By Soundarya on கார்த்திகை 7, 2025

Spread the love

1970களில் இருந்து மலையாள சினிமாவில் நகைச்சுவை மற்றும் வில்லன் வேடங்களுக்கு பெயர் பெற்ற நடிகர்  ஜனார்த்தனன். இவர் சிறுவயதிலிருந்தே தனக்குத் தெரிந்த உறவினரான விஜயலட்சுமியை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், தனது காதல் விவகாரம் குறித்து கூறியுள்ளார். “கொஞ்ச காலகட்டத்தில் என் மனைவி உடல் ரீதியான நெருக்கத்தில் ஆர்வத்தை இழந்துவிட்டாள், அதனால் வேறு ஒரு பெண்ணுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது.

சுமார் 18 வருடங்களுக்கு முன்பு, எனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. நான் அவளுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். என் மனைவிக்கு அந்த விவகாரம் தெரியும். இந்த சம்பவத்தைத் தவிர, என் வாழ்க்கையில் வேறு எந்த கரும்புள்ளியும் இல்லை. இந்த விவகாரத்தால் என் குடும்பத்தில் யாரும் கவலைப்படவில்லை,” என்று அவர் கூறினார்.