அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் விவகாரத்தில் செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதனை தொடர்ந்து செங்கோட்டையனின் ஆதரவாளர்களையும் அடுத்தடுத்து நீக்கி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் அதிமுகவில் செங்கோட்டையன் விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் பாஜகவில் யாரை பார்த்தார்? என்ன பேசினார்? என்ற தெளிவான தகவல் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் 6 பேர் சென்றதாக செங்கோட்டையன் கூறும் நிலையில் அவர்கள் யார்? எனவும் நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.
