அமமுக ஆட்சி மன்ற குழு தலைவரும், அரூர் (தனி) முன்னாள் MLA-வுமான முருகன் பாமகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. தருமபுரியில், கடந்த இரண்டு நாள்களாக அன்புமணியின் நிகழ்ச்சிகளில் அவர் அடுத்தடுத்து பங்கேற்று வருகிறார். அரூரில் இவர் மிகவும் பிரபலமான முகம் என்பதால் அன்புமணி தரப்பில் வரும் தேர்தலில் முருகன் தனக்கும் ஒரு சீட்டுக்கு காய் நகர்த்தலாம் எனக் கூறப்படுகிறது. அமமுகவில் இருந்து பலரும் சமீப காலமாக அதிமுக, திமுகவுக்கு தாவி வருகின்றனர்.
