ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில், மூடநம்பிக்கையின் காரணமாக 9 மாதக் குழந்தையின் மீது சூடான இரும்புக் கம்பிகளால் முத்திரை குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தபோது, பேயோட்டுதல் என்ற மூடநம்பிக்கையில் குடும்பத்தினர் இந்த ஆபத்தான நடவடிக்கையை எடுத்தனர். குழந்தை தற்போது மாவட்ட தாய் மற்றும் சேய் மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, குழந்தையின் நிலை தற்போது சீராக உள்ளது.
பில்வாராவைச் சேர்ந்த கோய்லி தேவி பகாரியா தனது 9 மாத மகன் கோவிந்த் உடல்நிலை சரியில்லாமல் மூச்சு விடுவதில் சிரமப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து யாரோ ஒருவரின் ஆலோசனையைப் பின்பற்றி, நிமோனியா குணமாகும் என்று நம்பி, குழந்தையை சூடான இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளார். ஆனால் குழந்தையின் நிலை மோசமடைந்தது. பின்னர் குடும்பத்தினர் அவரை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர்.
