வளிமண்டல மேலடுக்க சுழற்சி மற்றும் வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் நவம்பர் 11ஆம் தேதி வரை மழை தொடரும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
