விஜய்க்கு மட்டும் தான் நெருக்கடியா..? என்னையும் பலமுறை கைது பண்ணுனாங்க… செல்வப்பெருந்தகை காட்டம்..!!

By Soundarya on கார்த்திகை 6, 2025

Spread the love

ஸ்ரீபெரும்புதூரில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பாக எஸ்.ஆர் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு மட்டுமே நெருக்கடி உள்ளது போல கூறுவது ஏற்க முடியாது.

என்னையும் கூட ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கிறார்கள். இந்தியா கூட்டணி ஆட்சியில், நம்முடைய ஆட்சியில் பலமுறை என்னை கைது செய்துள்ளார்கள். சைதாப்பேட்டையில் மின்விசிறி இல்லாத அறையில் கூட அடைத்து வைத்தார்கள்” என்று கூறியுள்ளார்.