கனமழை எதிரொலியால் முதல் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் காலை ஆறு மணி முதல் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
