உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த லட்சக்கணக்கான குடும்ப தலைவிகள் எப்போது தொகை வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில், எத்தனை குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், குறைந்தது 3 லட்சம் பெண்களுக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
