தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கு முன்னதாக அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது அதனை விஜய் களத்தில் இறங்கி முற்றிலுமாக மாற்றியுள்ளார். இதனால் 2026 தேர்தல் களம் யாருக்கானது என்பது பரபரப்பாகவே பார்க்க படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் புதிதாக அரசியலில் களம் இறங்கியுள்ள விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
அதே சமயம் தனது கூட்டணியை பலமாக வைத்துள்ள ஸ்டாலின் இந்த முறையும் திமுக ஆட்சி தான் அமையும் என்பதில் உறுதியாக உள்ளார். அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றார். சமீபத்தில் கூட ஓபிஎஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த விவகாரம் அடங்குவதற்குள் அதிமுகவில் உள்ள அதிருப்தி தலைவர்கள் சிலர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஆர் வைத்தியலிங்கம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பேசி அமைச்சர் சேகர்பாபு, wait and see என சூகமாக பதிலளித்துள்ளார். இதனால் முக்கிய அரசியல் பிரபலம் திமுகவில் இணைய உள்ளது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
