கன்னியாகுமரி மாவட்டத்தில், மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணதாஸ் (36) என்பவருக்கு பெண் ஒருவர் தன்னுடைய மகளை திருமணம் செய்துகொடுத்துள்ளார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்கள் .
இந்நிலையில் மதுபோதைக்கு அடிமையான கிருஷ்ணதாஸ், ஒருநாள் தன்னுடைய மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தனது மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், மனமுடைந்த அந்த பெண், தனது மகள் மற்றும் மகளின் ஆண் நண்பர் ஆகியோருடன் சேர்ந்து கிருஷ்ணதாஸை கொலை செய்துள்ளார்.
