கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு சென்னை மாமல்லபுரத்தில் இன்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2026 தேர்தலில் TVK – DMK இடையே தான் போட்டியென விஜய் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுகுழுவில் பேசிய அவர், திமுக ஆட்சி மீது நீதிமன்றத்திற்கு மட்டுமல்ல மக்களுக்கும் நம்பிக்கை இல்லை என சாடினார். மக்களை நம்பி களத்தில் இறங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு 2026 தேர்தலில் நிச்சயம் வெற்றி உறுதி எனவும் சூளுரைத்தார். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் பேசிய முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.
