மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸிலடா பற்றிய விவகாரம் தான் ஒன்றரை மாதமாக டிரெண்டாகி வருகிறது. தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்ததோடு, அவரோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், விடியோக்கள் வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக தற்போது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் பிரபலங்களின் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா. தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் எனவும் கூறியிருந்தார்.
மேலும் குழந்தைக்கும், தனக்கும் மருத்துவ செலவு, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஜாய் கிரிசில்டாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன் குழந்தை பிறந்த நிலையில் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் DNA பரிசோதனை மூலம் குழந்தை என்னுடையது என நிரூபிக்கப்பட்டால், குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வேன். என் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டதாக ஒருபோதும் நான் ஒப்புதல் கொடுக்கவில்லை. இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடத்தப்பட்டது என்றும் மகளிர் ஆணையத்தின் பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் எனவும் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
