BIG BREAKING: 2026 தேர்தல் கூட்டணி…. சற்றுமுன் முடிவை அறிவித்தார் விஜய்….!

By Nanthini on கார்த்திகை 5, 2025

Spread the love

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக பொதுக்குழுக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. பொதுக்குழு தொடங்கிய உடன் கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செய்தார். இதன்பின், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு விஜய் உள்ளிட்ட அனைத்து தவெக நிர்வாகிகளும் கண்ணீருடன் மௌன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து விஜய் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் தமிழக வெற்றி கழகம்  தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தமிழக வெற்றிக்கழகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கூட்டணிக்கு வர வேண்டுமென அதிமுக மற்றும் பாஜக மாறி மாறி அழைப்பு விடுத்த நிலையில் அதனை தமிழக வெற்றி கழகம் நிராகரித்துள்ளது.