விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கூட்டணி தொடர்பான முக்கிய தீர்மானத்தை விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கூட்டம் நடைபெற உள்ள மாமல்லபுரத்திற்கு விஜய் காரில் வருகை தந்துள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கட்சியின் பேனர்கள், கோடிகளை காவல்துறையினர் அகற்றி உள்ளார்கள்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் காவல்துறையினர் கடும் நெருக்கடி கொடுப்பதாக குற்றம் சாட்டிய நிலையில் அனுமதி பெறாமல் பேனர்கள், கொடிகள் வைக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளார்கள்.
