நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை இந்தியா வீழ்த்திய வரலாற்று சிறப்புமிக்க ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை 2025 வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. பிரதமர் முதல் சினிமா பிரபலங்கள் வைத்தார் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் உலக கோப்பையில் இந்திய அணிக்காக 308 ரன்களை எடுத்த பிரதிகா ராவலுக்கு சாம்பினுக்கான பதக்கத்தை ஐசிசிஐ வழங்காதது பெரும் சர்ச்சையாகி உள்ளது. கடைசி லீக் போட்டியில் காயமடைந்து தொடரிலிருந்து பிரதிகா வெளியேறவே இறுதியான 15 பேர் கொண்ட இந்திய அணியில் அவர் இடம் பெறாததால் பதக்கம் வழங்கப்படவில்லை. இது ரசிகர்களுடைய பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.
