மாணவர்களுக்கு குஷியோ குஷி…! மொத்தம் 55 நாட்கள் பள்ளி விடுமுறை… எப்படி தெரியுமா..?

By Soundarya on கார்த்திகை 4, 2025

Spread the love

இன்று பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும்.  10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.70 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும். மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே  20ஆம் தேதியும்  வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 55 நாட்கள் பொதுத்தேர்வு தேர்வு விடுமுறை இருக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.