நள்ளிரவில் பரபரப்பு… கோவை சம்பவத்தில் 3 பேரை சுட்டு பிடித்த போலீஸ்…!

By Nanthini on கார்த்திகை 4, 2025

Spread the love

கோவையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை தனிப்படை போலீசார் சுட்டு பிடித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீசார் குணா தவசி, சதீஷ் மற்றும் காளீஸ்வரன் ஆகியோரை துடியலூர் பகுதியில் சுற்றுவளைத்தனர்.

அவர்கள் தப்ப முயன்ற நிலையில் போலீசார் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சித்தனர். அப்போது அவர்களை காலில் சுட்டு பிடித்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் மூன்று பேரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.