ஸ்டாலினுக்கு செம ஷாக்… அதிமுக, பாஜகவுடன் இணைந்தது விஜய் கட்சி… அரசியலில் திடீர் பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 4, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே கோவை கல்லூரி மாணவி கேங் ரேப் விவகாரத்தில் அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு உள்ளன.

கோவை பீளமேடு பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தன. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.