சற்றுமுன்: அரசு பேருந்து விபத்தில் பலி எண்ணிக்க 24 ஆக உயர்வு… சாலையில் சிதறி கிடக்கும் உடல்கள்…!

By Nanthini on கார்த்திகை 3, 2025

Spread the love

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் பஸ்சுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை, பெண்கள் உடல்களைக் கண்டு உறவினர்கள் கண்ணீர் சிந்திய காட்சிகள் காண்போரை கலங்க வைக்கிறது. மேலும் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.