மகளிர் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. நவி மும்பையில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பேட்டிங்கில் 87 ரண்களும், வந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருதை வென்றார்.
Respect 🇿🇦🇮🇳 Friends forever ❤️ pic.twitter.com/4Vq8pJzvVg
— Laura Wolvaardt SA (@IDFMAGA) November 3, 2025
இந்நிலையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தோல்வியால் மனமுடைந்த தென்னாப்பிரிக்க வீராங்கனை மரிசேன் காப்-க்கு இந்திய வீராங்கனைகள் ஜெமிமா, ராதா தோளில் சாய்ந்தபடி ஆறுதல் சொல்கிறார்கள்.
