சமீபகாலமாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தற்போது கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரை தூக்கிச் சென்று 3 இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஏர்போர்ட் பின்புறம் உள்ள சாலையில், கல்லூரி மாணவியின் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஆண் நண்பரை கொடூரமாக தாக்கிவிட்டு மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். அந்த இளைஞர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
