தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக மட்டுமின்று விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார். மீண்டும் கட்சியை வலுப்படுத்த பல வேலைகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி போன்றவற்றிற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் மாணவர் அணியில் முதல் கட்டமாக, 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி என அனைத்திற்குமே தனித்தனியாக 64 கழக மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து TVK தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
