தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. அதன்படி சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என eps-க்கு கெடு விதித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். பிறகு அமித்சாவை சந்தித்து பேசிய செங்கோட்டையன் மௌனம் காத்து வந்தார். இதனிடையே சமீபத்தில் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். இது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில் நேற்று கட்சியிலிருந்து மொத்தமாக செங்கோட்டையனை நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் செங்கோட்டையன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை மிகப் பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூத்த தலைவர் செங்கோட்டையன் நேற்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
