பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்தியாவின் சார்பாக தமிழகத்திலிருந்து சென்னை கண்ணகி நகரை சேர்ந்த வீராங்கனை ஆர்.கார்த்திகா துணை கேப்டனாக பங்கு பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றார் . இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு பைசன் பட குழு சார்பாக 5 லட்சத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் நேரில் வழங்கினார் .
மேலும் கண்ணகி நகர் கபடி குழுவிற்கும் 5 லட்சத்தை படக் குழு சார்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில் கார்த்திகாவை பைசன் படத்தில் கபடி வீரராக நடித்த துருவ் விக்ரம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவை பகிர்ந்து, நீங்கள் எனக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கும் ஒரு உத்வேகம் என்று துருவ் விக்ரம் பதிவிட்டுள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
