“டேய் தகப்பா இப்படி பண்ணிட்டியே”… மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் அம்மாவோடு ஓட்டம் பிடித்த தந்தை… இறுதியில் காத்திருந்த பயங்கர ட்விஸ்ட்…!

By Nanthini on கார்த்திகை 1, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் தன் மகனுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட மணமகளின் தந்தையுடன் 45 வயதான திருமணமான பெண் ஒருவர் ஓடிப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கிராமத்தில் 45 வயது பெண்ணின் மகனுக்கும் 50 வயதுடைய நபரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண நிச்சயம் முடிந்த பிறகு மணமகனின் தாய்க்கும் மணமகளின் தந்தைக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்தப் பெண் ஒரு வாரம் காணாமல் போனதால் குடும்பத்தினர் உடனே போலீசில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் தன்னுடைய மகனுக்கு சம்மந்தியாக இருந்தவருடன் விருப்பப்பட்டு ஓடி சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜரான இருவரும் தாங்கள் காதலிப்பதாகவும் ஒன்றாக சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர். இருவருமே வயது வந்தவர்கள் என்பதால் இது அவர்களுடைய தனிப்பட்ட விவகாரம் என்று கூறி போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. பெற்ற மகனையும் மகளையும் ஏமாற்றிவிட்டு வயதான ஜோடி திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.