ஓபிஎஸ், டி.டி.வி-ஐ சந்தித்ததன் எதிரொலியாக, அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த செங்கோட்டையன், ஜெ., மறைவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா தன்னிடம் பேசினார்.. ஆனால், அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இபிஎஸ் பெயரை பரிந்துரை செய்தேன் . 2 முறை முதல்வர் வாய்ப்பு கிடைத்தும் அதிமுக உடைந்துவிடக்கூடாது என விட்டுக்கொடுத்தேன். திமுகவின் ‘B’ டீமாக நான் இல்லை, கோடநாடு வழக்கில் இபிஎஸ் தான் A1 ஆக இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மதுரையில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், கோடநாடு வழக்கில் எடப்பாடி தான் A1 என்றால் புடிச்ச ஜெயில போடுங்களேன். நாங்களா வேண்டாம் என்று சொல்கிறோம். சட்டப்படி ஜெயில்ல போடுங்க தம்பி. திமுக ஆட்சி தானே நடக்குது. திராணி இருந்தால், ஆதாரங்கள் இருந்தால் கைது பண்ணட்டும்” என்று பேசி உள்ளார்.
