மொன்தா புயல் எதிரொலியாக சென்னை மற்றும் திருவள்ளூரில் கடந்த 28-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக இன்று (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று சென்னையில் பள்ளிகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராசராசசோழனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் காரணமாக தஞ்சாவூரில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறுவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
