நாடு முழுவதும் விலை குறைந்தது… BSNL வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர்…!!

By Soundarya on கார்த்திகை 1, 2025

Spread the love

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) நிறுவனமானது சமீபத்தில் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்கியது. இதனை அடுத்து பலரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறினார்கள். இந்த நிலையில் நாடு முழுவதும் தனது வாடிக்கையாளர்களுக்கு செல்போன் ரீசார்ஜில் 5% தள்ளுபடி வழங்கும் பிளானை BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ரூ.485 திட்டம் இனி 460 ரூபாய்க்கு கிடைக்கும். இதில், 72 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் கால், தினமும் 100 SMS ஆகியவற்றை பெறலாம். இதேபோல், 1,999 ரூபாய்  ரிசார்ஜ் பிளானிலும் 100 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது