செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கிய இபிஎஸ்க்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவை வளர்ப்பதை விட்டுவிட்டு அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது என்றும் இது போன்ற மனபாங்கு திருத்திக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அதிமுக ஒன்றிணைவதற்கு யார் இடையூறாக இருந்தாலும் அவர்களை திமுகவுக்கு மறைமுக உதவி செய்பவர்களாகவே கருத முடியும். என்ன நடந்தாலும் அதிமுக ஒன்றிணைவது உறுதி தான் என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
