ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகிய மூன்று பேரையும் ஒன்று சேர்த்து, தன்னை சசிகலா முதல்வர் வேட்பாளராக நிறுத்திக் கொள்ள ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா, ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் தற்போது ஓரணியாக திரண்டுள்ளார்கள். இந்த கூட்டணிக்கு தற்போது யார் தலைமை தாங்குவது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக,”என்னுடைய தலைமையில் ஆட்சி அமையும்” என்று சசிகலா கூறிய நிலையில், அவர் முதல்வர் வேட்பாளராக நின்று புதிய கட்சியை தொடங்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
