தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார். அடுத்தடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி உள்ளார். இந்நிலையில் விஜய்யை அதிமுக கூட்டணியில் சேர்த்துக்கொண்டு, பாஜக-வை கழட்டி விடுவதற்கு இபிஎஸ் திட்டமிட்டு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. கரூர் விவகாரத்திற்குப் பிறகு, விஜய்யை அதிமுக-வில் இணைக்க இபிஎஸ் பல கொக்கிகளைப் போட்டுப் பார்த்தார். ஆனால், விஜய் சிக்காமல், அமைதி காத்து வருகிறார். இதனால், இபிஎஸ்-ன் எண்ணம் பழிக்காமல் போனது. வரும் காலங்களில், பாஜக – அதிமுக இடையே உள்ள பந்தம் சமரசமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
