பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா சரிகமப சீனியர்ஸ், நம்ம வீட்டு கல்யாணம், அதிஷ்டலட்சுமி, காமெடி டைம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அர்ச்சனாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பல்வேறு டரோல்களை சந்தித்த அர்ச்சனா ஜீ தமிழுக்கு சென்ற பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
சமீபத்தில் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டதாக ஒருவர் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாவது, “டேய் ஃபர்ஸ்ட் நல்ல போட்டோ போடு. இரண்டாவது புருஷன் கூட சண்டை போட்டு தற்கொலை… நோ சான்ஸ்… அவரை தான் அடிப்பேன்” என பதிவிட்டுள்ளார்.
