பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். பின்னர் கப்பலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூறியதாவது, 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தேர்தலில் துரோகிகளால் தான் அதிமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது. கட்சியில் நடந்த உள்குத்து வேலைகளால் தான் அதிமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் ஆகிய 3 பேருமே திமுகவின் பீ டீம் போன்று செயல்படுகின்றனர்.
இதனால் தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனம் அடைந்து விட்டது என கூறுவது தவறுதான். மூன்று பேர் ஒன்றிணைவது பற்றி பேசுவதே வீண். செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கட்சியில் இருந்த களைகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக நன்றாக செழித்து வளர்ந்து. அடுத்த முறை ஆட்சி அமைக்கும். செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் கிடையாது. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
