தமிழக முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் சுமார் 4829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை அரசு எடுத்து நடத்தி வரும் நிலையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபானங்கள் விற்பனை, Pos ( Card மூலம்), யுபிஐ மூலம் நடைபெறும் நிலையில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை விதிமீறல்களை தடுக்கும் வகையில் பின்வரும் நடைமுறைகளை செயல்படுத்தி கடைபிடிக்க வேண்டும்.
மதுபான கடைகளில் மதுபானங்கள் விற்பனை ரொக்கம், கார்டு மற்றும் யுபியை ஆகியவை மூலம் நடைபெறும் நிகழ்வுகளில் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் மட்டுமே அவைகளை விற்பனை செய்திருக்க வேண்டும். இந்த நடைமுறையில் வேறு எதுவும் நிகழக் கூடாது. ரொக்கம், கார்டு மற்றும் UPI மூலமாக மதுபானங்களின் 2/4 விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை தொகை பெறப்பட்ட முழு தொகையையும் அப்படியே டாஸ்மாக் கணக்கில் செலுத்த வேண்டும்.
கார்டு மற்றும் யுபியை மூலமாக அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை கூடுதலாக ஏதேனும் தொகை பெறப்பட்டிருந்தால் அவ்வாறு கூடுதலாக பெறப்பட்ட தொகையை பணத்திற்கு மதுபானம் விற்ற தொகையிலிருந்து கழித்து மீதி தொகையை வங்கியில் செலுத்தக் கூடாது. அதற்கு மாறாக பணத்திற்கு மதுபானம் விற்ற தொகை ஒவ்வொரு மதுபான புட்டிகளுக்கும் அவைகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் அந்த நாளில் விற்பனை மேற்கொண்ட புட்டிகளின் முழுமையான கூட்டுத் தொகையாக இருக்க வேண்டும்.
மதுபானங்களின் விற்பனையில் அதிகபட்ச விற்பனை விலையில் ஒரு பகுதி பணமாகவும் ஒரு பகுதி கார்டு மற்றும் யுபிஐ மூலம் பெறப்பட்டால் அந்தந்த கடைகளில் தனி பதிவேடுகளில் இந்த விவரங்களை பதிவு செய்து பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல உத்தரவுகள் தமிழக முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரொக்கம், கார்டு மற்றும் யுபிஐ மூலம் MRP விலையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இனி மது பிரியர்கள் அதிக செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்தச் செய்தி குடிமகன்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
