கல்லீரல் முதல் இதயம் வரை….! முள்ளங்கி சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா…? கண்டிப்பா தெரிஞ்சிகோங்க….!!

By Devi Ramu on ஐப்பசி 30, 2025

Spread the love

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். குளிர் காலத்தில் முள்ளங்கியை அதிகமாக சாப்பிட வேண்டும். முள்ளங்கியில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதும் ரசாயன கலவைகள் உள்ளது. இது உடலின் இயற்கையான அடிபோனிக்டிக் உற்பத்தியை மேம்படுத்துகிறது. முள்ளங்கியை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கல்லீரல் நச்சுத்தன்மை மற்றும் சேதத்தில் இருந்து பாதுகாக்கும் கலவைகள் முள்ளங்கியில் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சிறுநீரகங்களில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றவும் முள்ளங்கி உதவும். பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் முள்ளங்கியில் நிறைந்துள்ளது. இது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும்.

   

இதய நோய் ஏற்படுவதை தடுக்கவும் உதவுகிறது. முள்ளங்கியில் அதிக அளவு குளுக்கோசினேட்டுகள் இருப்பதால் புற்றுநோய் ஏற்படுத்தும் மரபணு மாற்றங்களில் இருந்து உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும். புற்றுநோய் கட்டி உருவாக்கும் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கும் திறனை கொண்டுள்ளது. சிறுநீர் பாதையில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் எரிச்சல் உணர்வு போன்றவற்றை குறைக்கவும் முள்ளங்கி சிறப்பு தீர்வாக அமைகிறது.