இதுக்கு பேரு தான் அதிர்ஷ்டம்… தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த போன் கால்… ஒரே நாளில் கோடீஸ்வரரான 29 வயது இந்தியர்…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

வெளிநாடுகளில் பணியாற்றக்கூடிய இந்தியர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஒரு நொடியில் மாற்றத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் சில நேரங்களில் நடைபெறுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் அபுதாபியில் வசிக்கும் ஒரு நபருக்கு நடந்துள்ளது. அபுதாபியில் வசிக்கும் 29 வயதான அனில் குமார் பொல்லா என்பவர் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி UAE Lucky Day Draw லாட்டரியில் சுமார் 239 கோடி பரிசு தொகையை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த அளவிலான வெற்றியைப் பெற்ற முதல் அதிர்ஷ்டசாலி என்பதால் இவர் UAE லாட்டரி யின் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். சீட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்த நேரத்தில் அணில் குமார் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு திடீரென வந்த அழைப்பு அவருடைய வாழ்க்கையை முழுமையாக மாற்றும் தருணமாக அமைந்தது. லாட்டரி அறிமுகமான நாட்டிலிருந்து தொடர்ந்து பங்கேற்று வந்த அவர் இதன் மூலமாக உண்மையான அதிர்ஷ்டத்தை உணர்ந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை இந்தியாவில் உள்ள தன் சகோதரி இடம் அவர் பகிர்ந்துள்ளார். இதுவரை இது ஒரு கனவா என்று தன்னைத்தானே கேட்கும் நிலையில் அவர் இருப்பதாக சிரிப்புடன் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.