“எனக்கு பணம் தான்டா முக்கியம்”… வெறும் 2000 ரூபாய் கடனுக்காக உயிருக்கு உயிரான நண்பனையே துடிதுடிக்க… குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுநாத் கவுடர்(30) என்பவர் தன்னுடைய நண்பரான தயானந்த் என்பவரிடமிருந்து கடந்த வாரம் 2000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை வாங்கிய போது ஏழு நாட்களில் திருப்பி செலுத்தி விடுவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அவரால் பணத்தை திரும்ப வழங்க முடியவில்லை. இதனிடையே தன்னுடைய பணத்தை திரும்ப தருமாறு நேற்று இரவு தயானந்த் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது ஆத்திரம் அடைந்த தயானந்த் தன்னிடம் இருந்த அறிவாளை எடுத்து மஞ்சுநாத்தை வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டார்.

இதனால் படுகாயம் அடைந்த மஞ்சுநாத் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தயானந்த் தன் நண்பனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை விசாரித்து வருகின்றனர். வெறும் 2000 ரூபாய் பணத்துக்காக நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.