நோயாளிக்கு உதவியாக வந்த பெண்… சரக்கு அடித்துவிட்டு ல் புல் போதையில் மயக்கம்… ஹாஸ்பிடல் கழிப்பறையில் நடந்த கொடூரம்… தூய்மைப்பணியாளர் கைது..!!

By Soundarya on ஐப்பசி 27, 2025

Spread the love

உத்தரபிரதேசம் மாநிலம் ஷாஜகான் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு உதவியாக அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மருத்துவமனைக்கு அருகில் உள்ள மதுக்கடையில் அந்த பெண் மது வாங்கி குடித்துள்ளார் . மதுவை குடித்துவிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அவர் உறவினர் இருந்த அதே மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து அந்த பெண் காலை கண்விழித்ததும் அங்கிருந்த தூய்மை பணியாளர் ஜெய்சங்கர் என்பவரிடம் தன்னுடைய உறவினர் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார். ஆனால் தூய்மை பணியாளர் அந்த பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் தூய்மை பணியாளர் ஜெய்சங்கரை கைது செய்துள்ளனர்.