வேலைக்கே போகாத மனைவிக்கு… வங்கிக்கணக்கில் ரூ.37.54 லட்சம் சம்பளம்… அரசு அதிகாரி கணவரின் மோசடிகள் அம்பலம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

By Soundarya on ஐப்பசி 27, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநில அரசுக்கு சொந்தமான ராஜ்காம்ப் இன்போ சர்வீஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை இணை இயக்குனராக பணி புரிந்து வருபவர் பிரத்தியுமான் திக்சித். இவருடைய மனைவி பூனம். இந்நிலையில் ராஜஸ்தான் கோட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில்  பிரத்தியுமான்  அரசின் டெண்டர்களை வழங்குவதற்காக ரெண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நடத்தியதில் பல திடுக்  தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த ஜனவரி 2019ல் இருந்து செப்டம்பர் 2020 வரை பிரத்தியுமான் மனைவி பூனத்திற்கு சொந்தமான ஐந்து வங்கி கணக்குகளில் 37.54 லட்சம் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது.

இந்த பணத்தை இரண்டு தனியார் நிறுவனங்கள் செலுத்தியுள்ளது. அதோட சம்பளம் என்ற பெயரில் இந்த பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு நிறுவனங்களிலும் பூனம் வேலை செய்ததாக வருகை பதிவேடு தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போது பூனம் ஒரு முறை கூட அந்த நிறுவனங்களுக்கு நேரில் சென்றது இல்லை என்பது தெரியவந்துள்ளது எனவும் கணவர் உதவியுடன் இது தயார் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கும் அரசின் பல்வேறு டெண்டர்கள் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரியான பிரத்தியுமான் சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களிலும் மனைவி வேலை செய்வது போலவும் அதற்கு சம்பளமாக பணம் பெறுவது போலவும் சித்தரித்து 37.54 லட்சம் பணத்தில் லஞ்சமாக வாங்கியுள்ளார்.