தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் ஸ்டாலின் இந்த முறையும் திமுக ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் என்ற எண்ணத்தில் அதற்கான பணிகளை செய்து வருகிறது.
அதே சமயம் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியிலும் EPS மும்முறமாக செயல்பட்டு வருகிறார். அதற்காக பலமுறை விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜயின் மாஸ் ஓட்டாக மாற வேண்டும் என்றால் அவருக்கு பயிற்சியுள்ள பயிற்சியாளர்கள் தேவை என்று KTR தெரிவித்துள்ளார். விஜய் கூட்டணிக்கு வந்தால் அதிமுகவினர் அந்த பயிற்சியாளர்களாக இருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவுடன் இணைந்தால் விஜய்க்கு தான் நல்லது என்று கூறியுள்ள அவர் விஜய் வந்தால் அதிமுக 220 சீட்டில் வெல்லும், விஜய் வரவில்லை என்றால் 150 சீட்டில் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
