பாட்டிலுக்கு 10 ரூபாய்… நெல் கொள்முதலுக்கு 40 ரூபாய்… திமுகவை அட்டாக் செய்த நயினார்..!!

By Soundarya on ஐப்பசி 25, 2025

Spread the love

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதுபோல நெல் கொள்முதலுக்கு 40 ரூபாய் வாங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “தமிழக அரசு நெல் கொள்முதலை சரியாக கையாளவில்லை.

உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் தாமதம் செய்கிறது. இதனால்  விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கிடையில் கொள்முதல் பணியில் 40 ரூபாய் வரை கமிஷன் கேட்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதுபோல நெல் கொள்முதலுக்கு 40 ரூபாய் வாங்குகிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.