தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த முறை ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரும்படி விசிக தலைவர் திருமாவளவனுக்கு, நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், “சமூகநீதி திமுக கூட்டணியில் கிடையாது. பிறகு ஏன் அந்த கூட்டணியில் இருக்கிறீர்கள்?. அங்கிருந்து வெளியே வரவேண்டியதுதானே. பாஜகவில் தான் சமூகநீதி இருக்கிறது. எங்களுக்குள் பேதம் கிடையாது. இந்து, இஸ்லாம் என்ற பிரிவு, பாகுபாடு கிடையாது. ஆனால் அதையெல்லம் உருவாக்குபவர்கள் DMK கூட்டணியில் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
