இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிக அளவு நடைபெறுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவு நடைபெறும் நிலையில் யாரை நம்புவது என்பதே கேள்விக்குறியாக உள்ளது . குழந்தைகள் மீதான குற்றங்களை தடுப்பதற்கு சட்டம் இருந்தாலும் சில நேரங்களில் அதற்கு எதிராக பல குற்றங்கள் நடைபெறுகிறது. அப்படிதான் உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 32 வயது நபர் தன்னுடைய மனைவியிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றார். அவருடன் 35 வயதான நண்பர் ராம் பாபு யாதவ் என்பவரும் தங்கி இருந்தார்.
இப்படியான நிலையில் தனது ஆறு வயது மகளை தன்னுடன் தங்க வைத்திருந்த அந்த தந்தை நண்பர் ராம்பாபு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அறிந்து கொண்டார். இந்த குற்றச்செயலை அறிந்த தந்தை தீவிர கோபத்தில் ஆத்திரமடைந்து ராம் பாபுவின் பிறப்புறுப்பை அறுத்து தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரே காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் தற்போது போலீசார் சிறுமியையும் பாதிக்கப்பட்ட அந்த நபரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பன் என்று நம்பி வீட்டில் விட்டதற்கு தன் மகளையே பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
