BREAKING: புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு… புரட்டி எடுக்கப்போகும் கனமழை….!

By Nanthini on ஐப்பசி 25, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் -கலிங்கப்பட்டினத்திற்கு இடையே வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி மாலை அல்லது இரவில் Montha புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று இரவு முதலே கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சம் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் எனவும் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் புயல் கரையைக் கடந்தாலும் தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.